கேரள வனப் பகுதியில் ரகசிய கூட்டம் நடத்த மாவோயிஸ்ட்கள் திட்டம்?- இரு மாநில எல்லையில் அதிரடிப்படை குவிப்பு

கேரள வனப் பகுதியில் ரகசிய கூட்டம் நடத்த மாவோயிஸ்ட்கள் திட்டம்?- இரு மாநில எல்லையில் அதிரடிப்படை குவிப்பு
Updated on
1 min read

தமிழகத்தின், கோவை மாவட் டத்தை ஒட்டியுள்ள கேரள வனப் பகுதியான பூக்கோட்டுப்பாடம் எனும் இடத்தில் அனைத்து முக்கிய மாவோயிஸ்ட்கள் பங்கேற்கும் ரகசியக் கூட்டம் நடைபெற உள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து இரு மாநில எல்லையோரத்தில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட் தலைவர் விக்ரம்கவுடா, கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த சோமன், இவர்களது குழுவினர் இரு மாநில எல்லையோரக் காடு களை ஒட்டியுள்ள கேரள - தமிழக மலையடிவார கிராமங்களுக்குள் அவ்வப்போது வந்து செல்வது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடக்குமுறைக்கு எதிராக ஆதிவாசி மக்கள், ஆயுதம் ஏந்திப் போராட முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழிலும், மலையாளத்திலும் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கைகளால் எழுதப்பட்ட சுவரொட்டிகளை மலைக் கிராமங்களில் அவர்கள் ஒட்டிச் சென்றதால், மாவோயிஸ்ட் கள் குறித்து தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலம் திருநெல்லி வனப்பகுதி வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து ஊடுருவிய மாவோயிஸ்ட்கள் பலர் கேரளத்துக்குள் நுழைந்துள் ளதாகவும், திருநெல்லி, மானந்த வாடி, அகழி, மேம்பாடி, அட்டப்பாடி வழியாக தங்களது வழித்தடத்தை அமைத்து கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சில எல்லையோர வனப் பகுதிகளில் நடமாடி வருவதாகவும், விரைவில் பூக்கோட்டுப்பாடம் எனும் இடத்தில் முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 35 பேரின் புகைப்படங்கள் எல்லையோர காவல்துறை மற்றும் வனத்துறை சோதனைச் சாவடிகளுக்கு வழங்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லையோரத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடி களிலும், இரு புறமும் கண் காணிப்புக் கேமராக்கள் பொருத்தப் பட்டு, கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனங்களும் முழுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கபட்டு வருகின்றன.

கேரளத்தில் இருந்து தமிழகத் துக்குள் நுழையும் சாலைகளான மாங்கரை, முள்ளி, ஆனைக்கட்டி, பில்லூர் போன்ற பகுதிகளில் இந்த சோதனைகள் 24 மணி நேரமும் நடைபெற்று வருகின்றன. பேருந்துகளில் பயணிப்போரிடமும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

மாவோயிஸ்ட்கள் யாரும் தமிழகப் பகுதிக்குள் நுழைந்து விடாதவாறும், நுழைந்தால் உடனடித் தாக்குதல் நடத்தவும் சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் நக்ஸல் தடுப்புப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரிக் கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in