Published : 23 Jun 2016 09:33 AM
Last Updated : 23 Jun 2016 09:33 AM

24 மீனவர்கள், 93 படகுகளையும் மீட்க முதல்வர் நடவடிக்கை: 87 முறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்தது. விவாத விவரம்:

கார்த்திக் (திமுக):

கோவை யில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டுவர வேண்டும். மேற்கு புறவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கோவையில் நகர்ப் பகுதியில் 2 நாளுக்கு ஒருமுறையும், மற்ற பகுதிகளில் 7, 8 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதை மாற்ற வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மட்டுமின்றி 103 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:

பாதாளச் சாக்கடை திட்டம், குடிநீர் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 7 நாட் களும் 24 மணி நேரமும் என்ற தினசரி குடிநீர் வழங்கும் திட்டம் ரூ.560 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:

கோவை மேற்கு புறவழிச் சாலை தி்ட்டம் 34.43 கி.மீ தொலைவுக்கு ரூ.320 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இதற் கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

அமைச்சர் டி.ஜெயக்குமார்:

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். அவர் களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது வழக்கமாக உள்ளது. இப் பிரச்சினைக்கு கச்சத் தீவை மீட்பதே நிரந்தர தீர்வாகும் என்பதே முதல்வரின் நிலைப்பாடு.

மீனவர்கள் பிரச்சினை தொடர் பாக பிரதமருக்கு இதுவரை 87 கடிதங்களை முதல்வர் எழுதியுள்ளார். தாக்குதல் சம் பவம் தொடர்பாக 10 கடிதங் களை எழுதியுள்ளார். மற்ற நாடுகளில் மீனவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களை மீட்பதற்காக 17 கடிதங்கள் எழுதியுள்ளார். இதுவரை 2 ஆயிரத்து 406 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 357 படகுகள் அரசு செலவில் மீட்கப்பட்டுள்ளன. கடந்த திமுக ஆட்சியில் 10 மீனவர்கள் இறந்தனர். இந்த ஆட்சியில் இதுவரை மீனவர்கள் இறப்பு ஒன்று கூட இல்லை. தற்போது 24 மீனவர்கள் மற்றும் அவர்களது 93 படகுகளை விடு விப்பதற்கான அனைத்து ஏற்பாடு களையும் முதல்வர் செய்து வருகிறார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x