

திருநெல்வேலி மாவட்டம் திசை யன்விளை அருகே பெண்ணை கட்டிப்போட்டு, ரூ.10 லட்சம் மதிப் பிலான நகைகளை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை யடித்து சென்ற சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
திசையன்விளை முதுமொத் தான்மொழியை சேர்ந்தவர் அரிசி வியாபாரி முத்துவேல். இவரது மனைவி பொன்செல்வி (28). இவர்களுக்கு முகுந்தன், நித்திஷ் என்று இரு மகன்கள் உள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு 11 மணி அளவில், வீட்டு வளாகத்தில் இருக்கும் கழிப்பறைக்கு பொன் செல்வி சென்றார். அங்கு மறைந் திருந்த முகமூடி கும்பல் திடீரென பொன்செல்வியை தாக்கியது. அவர் வாயில் துணிகளை திணித்து கைகளை கட்டியது. நிலை குலைந்த பொன்செல்வி மயக்க மடைந்தார்.
அவர் அணிந்திருந்த 10 பவுன் தாலிச்செயின், கைகளில் அணிந் திருந்த 4 பவுன் தங்க வளையல் களை கொள்ளையர்கள் பறித்துக் கொண்டனர். தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் மட்டும், வீட்டுக்குள் நுழைந்துள்ளார். முத்துவேல் மற்றும் குழந்தைகள் உள்ளே தூங்கிக் கொண்டிருந் தனர்.
அறையில் தொங்கவிடப்பட்டி ருந்த சாவியை எடுத்து, பீரோவைத் திறந்து 16 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை எடுத் துக் கொண்டு, கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர்.
சில மணி நேரத்துக்கு பின் மயக்கம் தெளிந்து எழுந்த பொன் செல்வி, தட்டுத்தடுமாறி சென்று கணவர் முத்துவேலை எழுப்பியுள் ளார்.
அதிர்ச்சி அடைந்த அவர், பொன்செல்வியின் வாயில் திணிக் கப்பட்டிருந்த துணிகளை எடுத்து, கைகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.
திசையன்விளை போலீஸா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். கொள்ளை யடிக்கப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.10.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.