

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று சந்தித்து பேசுகிறார்.
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக எம்எல்ஏக்கள் பண பேர விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும், அதிமுக ஆட்சியை கலைக்கவும் கோரி மனு கொடுத்தார். முதல்வர் பழனிசாமி அரசு மீது மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத் தியிருந்தார்.
இந்நிலையில், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரையும் ஆளுநர் வித்யா சாகர் ராவை இன்று சந்தித்து பேசுகிறார். ஆளுநரை சந்திக்க தம்பிதுரைக்கு காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.