Published : 21 Mar 2014 04:52 PM
Last Updated : 21 Mar 2014 04:52 PM

கோவை பாஜக வேட்பாளருக்கு எதிராக கட்சியினர் போர்க்கொடி

கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப் பட்டுள்ளதை எதிர்த்து, கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக, முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக் கட்சியின் மாவட்டச் செயலாளர் நந்தகுமார் தலை மையில் சிலர் கட்சி அலுவலகத் தினுள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தொகுதிக்கு அறிவிக் கப்பட்டுள்ள வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும்; மாநிலச் செயலாளர் ஜி.கே.செல்வகுமாரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மாவட்டச் செயலாளர் நந்தகுமார் கூறியது: கோவை மாவட்டத்தில் பாஜக என்பது பல உயிர்களை தியாகம் செய்து வளர்த்த கட்சி. ஆகையால்தான், கோவையில் பாஜக இன்றுவரை வலிமையாக இருந்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக கட்சியின் எந்த நிகழ்வுகளிலும் போராட்டங்களிலும் கலந்து கொள்ளாத, தொண்டர்களுக்கு உதவி செய்யாத சி.பி.ராதா கிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

10 ஆண்டுகளாக கட்சியை சிறந்த முறையில் வழிநடத்தி, தொண்டர்களை அரவணைத்து, எல்லா நிகழ்வுகளிலும் தோள் கொடுத்துவரும் ஜி.கே.செல்வகு மாருக்குதான் வேட்பாளர் பொறுப்பு வழங்கப் பட வேண்டும். இதனை வலியுறுத்தும் விதமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். மாநிலச் செயலாளர் ஜி.கே.செல்வகுமாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கட்சிக் காக உழைக்காதவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ஏமாற் றத்தை அளிக்கிறது. கட்சித் தலைமை வேட்பாளர் அறிவிப்பை திரும்ப பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இதுகுறித்து சி.பி.ராதாகிருஷ் ணன் கூறுகையில், “அரசியல் என்பது ஆவலும், எதிர்பார்ப் புகளும் நிறைந்த தளம். எதிர்பார்ப்புகள் நிறைவேறா ததன் காரணமாக போராட் டம் நடத்தலாம். தலைமை யின் முடிவே இறுதியானது. அதிருப்தியாளர்களைச் சந்தித்து சமாதானப்படுத்துவேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x