மாதி புயலால் கனமழை : 6000 ஏக்கர் சம்பா நீரில் மூழ்கின

மாதி புயலால் கனமழை : 6000 ஏக்கர் சம்பா நீரில் மூழ்கின
Updated on
1 min read

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் சுமார் 6000 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

மாதி புயலால் தமிழகத்தில் மழை பெய்யும் என்றும், பெரிய அளவில் பாதிப்பு நேரிடாது என்றும் அறிவிக்கப்பட்டது. பின்னர், வலு விழந்து வியாழக்கிழமை இரவு தொண்டிக்கு அருகே புயல் கரையைக் கடந்தது.

இதன் காரணமாக நாகப்பட்டி னம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. மழையுடன் சூறைக் காற்றும் வீசியதால் சீர்காழி பகுதியில் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. சம்பா சாகுபடி தற்போது சிறப்பாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்த நிலையில், வியாழக்கிழமை புயல் காரணமாக வீசிய சூறைக்காற்றால் நெற்பயிர்கள் தண்ணிரில் மூழ்கின.

சீர்காழி வட்டத்தில் மட்டும் 6000 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அளக்குடி, ஆரப்பள்ளம், ஆச்சாள்புரம், மாதானம், பழைய பாளையம், புதுப்ப ட்டினம், கொண்டல், வள்ளுவக்குடி, வைத்தீஸ்வரன்கோவில், ஆதமங்கலம், கீழச்சாலை, திரு வெண்காடு, மங்கைமடம், சின்ன பெருந்தோட்டம், நெய்வாசல் என சீர்காழி வட்டத்துக்குள்பட்ட பெரும்பாலான கிராமங்களில் பயிர்கள் நீரில் மூழ்கின.

இதனால், பயிர்கள் அழுகி விடுமோ என விவசாயிகள் அச்சம டைந்துள்ளனர். இதையடுத்து, வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள் ளனர். தொடர்ந்து, மழை பெய்தால் சம்பா சாகுபடி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in