சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கை: தமிழக ஆளுநருக்கு திமுக வேண்டுகோள்

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கை: தமிழக ஆளுநருக்கு திமுக வேண்டுகோள்
Updated on
1 min read

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உடனே நடவடிக்கை எடுக்குமாறு தமிழக ஆளுநருக்கு திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக ஆளுநர், சட்டப்பேரவை தலை வர், தலைமைச் செயலாளர், பேரவைச் செயலாளர், தூர்தர்ஷன் இயக்குநர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவை நிகழ்வு களை அரசு அல்லது தனி யார் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய வும், இணையவழியில் ஒளிபரப்ப வும் சட்டப்பேரவை அனுமதி அளிக்கவில்லை. ஆனால், பேரவையில் கேமராக்கள் வைக்கப்பட்டு அனைத்து நிகழ்ச்சி களும் பதிவுசெய்யப்படுகின்றன.

சட்டப்பேரவை நடவடிக்கைகள் வெளிப்படையாக அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்பது திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அரசியல் ஆர்வலர்கள், பொது மக்களின் கோரிக்கை. பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் சட்டப்பேரவையில் வேண்டுகோள் வைத்தார். தங்களின் பிரதிநிதிகள், பேரவையில் என்ன பேசுகிறார்கள், எப்படி செயல்படுகிறார்கள் என் பதை பார்க்கும், கேட்கும் சூழல் மக்களுக்கு இருக்க வேண்டும்.

நாடாளுமன்ற நிகழ்வுகள் கடந்த 2006 முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பேரவை நிகழ்வுகள் இணையவழியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. பல வடகிழக்கு மாநிலங்கள் இச்சேவையை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

யார் அவைக்கு வருகிறார்கள்?

தமிழகத்தில் செலவினத்தை காரணம்காட்டி நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்தி ருப்பது துரதிர்ஷ்டம். இது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. தற்போது ஆளுங்கட்சி, தங்க ளுக்கு சாதகமான நிகழ்வுகளை தேர்வுசெய்து குறிப்பிட்ட தொகுப்புகளை மட்டும் தொலைக் காட்சி ஊடகங்களுக்கு கொடுக் கிறது. மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக திமுக எழுப்பும் கோரிக்கைகள் பற்றிய தொகுப்புகள் ஊடகங்களுக்கு தரப்படுவதில்லை. பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தால், எந்தெந்த பிரதிநிதிகள் சட்டப்பேரவைக்கு தினமும் வருகிறார்கள், விவாதத்தில் பங்கேற்று எப்படி பேசுகிறார்கள், தொகுதி மக்களுக்காக என்னென்ன கேள்வி கேட் கிறார்கள் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள முடியும்.

தூர்தர்ஷனை கேட்கலாம்

தவிர, நேரடி ஒளிபரப்புக்கு செலவினத்தை அரசு காரணம் காட்டுவது நகைப்புக்குரிய விஷயம். ஒருவேளை, செலவினம் காரணமாக இருந்தால் மக்க ளவை, மாநிலங்களவை நிகழ்வு களை இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்வதுபோல, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளையும் இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்யுமாறு தூர்தர்ஷனுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுக்கலாம்.

பொதுமக்கள் நலன் கருதி, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யவும், இணைய வழியில் நேரடியாக ஒளிபரப்பவும், பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்பு வதற்கென தனி தொலைக்காட்சி சேனல் ஏற்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in