

ஆர்.கே.நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கலைக்கோட்டு தயத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காலை பிரசாரத்தில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆர். நகர், தேசிய நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக நடந்து சென்று வாக் காளர்களிடம் துண்டறிக்கைகளை கொடுத்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
‘‘ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள குப்பை கிடங்குகளில் குப்பை களைப் பிரித்தெடுத்து இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். இதன்மூலம் இங் குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். நிரந்தரமாக மீன் அங்காடி அமைத்து தரப்படும்’’ என பிரசாரத்தின்போது பொதுமக்களி டம் கூறி வாக்கு சேகரித்தார்.