Published : 10 Apr 2017 09:42 AM
Last Updated : 10 Apr 2017 09:42 AM

முதலீட்டுக்கு இலக்கு தேவை: ‘ஏற்றம் தரும் முதலீடு’ நிகழ்ச்சியில் நிபுணர் கருத்து

இலக்கை நோக்கிய முதலீடு மிக அவசியம் என்று ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீகாந்த் மீனாட்சி தெரிவித்தார்.

‘தி இந்து’ தமிழ் ‘வணிக வீதி’ மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்திய முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற் றது. இந்த நிகழ்ச்சியில் முதலீட்டு ஆலோசகர் கே.புகழேந்தி, ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீகாந்த் மீனாட்சி, ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழக தலைவர் அசோக் நஞ்சுண்டராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ‘தி இந்து’ இணையதள பிரிவின் ஆசிரியர் பாரதி தமிழன் அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார்.

‘‘ஒவ்வொருவரும் நிதி திட்டமிடல் செய்ய வேண்டும். எல்லோரும் செலவு செய்வதற்கு பட்ஜெட் போடுகிறார்கள். சேமிப்புக் கும் பட்ஜெட் போட வேண்டும். முதலீட்டுக்கும் சேமிப்புக்கும் வித்தியாசம் உள்ளது. சேமிப்பு என்றால் நீங்கள் வைத்திருந்த பணம் 10 வருடங்களுக்கு அப்படியே இருக்கும். முதலீடு மட்டுமே உங்களது பணத்தை பெருக்கும். அதுமட்டுமல்லாமல் குறுகிய கால முதலீடாக அல்லாமல் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டும். ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்ட் என பல்வேறு வகைகளில் முதலீடு செய்யவேண்டும். இந்த முதலீடுகள் நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபத்தைத் தரும்’’ என்று முதலீட்டு ஆலோசகர் கே.புகழேந்தி கூறினார்.

‘‘இந்திய மக்களில் 9 சதவீதம் பேர் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை உள்ளிட்ட சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர் என்று செபி ஆய்வு தெரிவிக்கிறது. வளர்ந்த நாடுகளில் 50 சதவீதம் பேர் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.

அவர்களுக்கு முதலீடுகள் குறித்த சரியான பார்வை இருக்கிறது. இந்தியர்களிடம் இதுபோன்ற பார்வை குறைவாக இருக்கிறது. வங்கி சேமிப்புத் திட்டங்கள் 7.5 சதவீத வட்டியை மட்டுமே தருகின்றன. ஆனால் லாப சதவீதத்துக்கான உறுதி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த உறுதிக்கு கொடுக்கக்கூடிய விலை அதிகம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் கொஞ்சம் ரிஸ்க் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபத்தைத் தரக்கூடியவை. உங்கள் முதலீட் டுக்கு சரியான லாபத்தை அடைய வேண்டுமென்றால் கொஞ் சம் ரிஸ்க் எடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரிஸ்க் குறை வாகவும் ஓரளவு லாபத்தைத் தரக்கூடிய திட்டங்களும் இருக்கின் றன. இதையும் முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இலக்கை நோக்கிய முதலீடு அவசியம். ஆனால், எந்த இலக்குக்காக மியூச்சுவல் பண்டை தேர்ந்தெடுக்கிறோம். இந்த மியூச்சுவல் பண்டால் நமக்கு என்ன பயன் என்பதை அறிந்து முதலீடு செய்ய வேண்டும்’’ என்று ஸ்ரீகாந்த் மீனாட்சி தெரிவித்தார்.

‘‘பல முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் என்று தெரியாமலேயே எஸ்ஐபி முதலீடு செய்து வருகின்றனர். எஸ்ஐபி என்பது மியூச்சுவல் பண்டில் உள்ள ஒரு முதலீட்டு முறை. தற்போது எஸ்ஐபி மூலம் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

இது ஓர் ஆரோக்கியமான போக்கு. மியூச்சுவல் ஃபண்ட் என்பது விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கி வரும் அமைப்பு. இதில் உங்களது தேவைக்கு ஏற்ப பண்டை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். மேலும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் பல முதலீட்டு ஆய்வாளர்கள் இருக்கின்றனர். இதனால் முதலீட்டாளர்களின் பணத் துக்கு பாதுகாப்பு ஏற்படுகிறது’’ என்று ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் தமிழக தலைவர் அசோக் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலீட்டாளர்கள். | படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x