

கடந்த புத்தாண்டை விட இந்த புத் தாண்டில் நகை விற்பனை 25 சதவீ தம் அதிகரித்துள்ளது. மேலும், வங்கி அட்டைகள் மூலம் பண பரி வர்த்தனை 15 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புத்தாண்டில் நகை வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் குடும்பத்தில் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் நேற்று நகைக் கடைகளில் வழக்கத்தை விட கூட் டம் அதிகமாக இருந்தது. சென்னை யில் தியாகராயர் நகர், மயிலாப்பூர், பிராட்வே, புரசைவாக்கம், தாம்பரம், அடையார், கதீட்ரல் சாலை, பெரம் பூர், போரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, “ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல் நகைக்கடைகளுக்கு மக்கள் வரத் தொடங்கினர். நேற்று அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த புத்தாண்டை விட, இந்த புத்தாண்டில் 25 சதவீதம் விற்பனை அதிகமாக இருந்தது. இதேபோல், வங்கிகளின் அட்டை மூலம் பண பரிவர்த்தனை செய்வது 15 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்ந்துள்ளது” என்றார்.