Published : 04 Sep 2016 09:31 AM
Last Updated : 04 Sep 2016 09:31 AM

மாணவர்கள் மீது ஆசிரியர்களுக்கு நேர்மறை எண்ணம் அவசியம்: கருத்தரங்கில் வலியுறுத்தல்

மாணவர்களை ஆசிரியர்கள் நேர்மறை எண்ணத்தோடு அணுக வேண்டும் என ஆசிரியர் தினக் கருத்தரங்கில் உளவியல் நிபுணர்கள் வலியுறுத்தினர்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, செயின்ட் ஜான்ஸ் பப்ளிக் பள்ளி சார்பில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. ‘இன்றைய மாணவர்கள், நாளைய சமூகம்’ என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கில், கேந்திரீய வித்யாலயா சங்கதன் நிறுவனத்தின் சென்னை மண்டல துணை ஆணையர் ஷேக் முகமது சலீம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அவர் பேசும்போது, ‘‘மாணவர்களுக்கு ஆசிரியரைப் பிடிக்கவில்லை என்றால், பாடத்தையும் பிடிக்காது. எனவே, வெறுமனே பாடப் புத்தகங்களை வைத்து மட்டும் கற்றுத்தராமல், புதிய அணுகுமுறைகளை ஆசிரியர்கள் கையாள வேண்டும். வாழ்நாள் முழுவதும் அவர்கள் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழவேண்டும்’’ என்றார்.

மன அழுத்தம்

குழந்தைகள் உளவியல் சிறப்பு நிபுணர் டாக்டர் சங்கீதா மது பேசும்போது, ‘‘குழந்தைகளின் எதிர்காலத்துக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதில் ஆசிரி யர்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

தம்மைப் பற்றி மற்றவர்கள், குறிப்பாக ஆசிரியர் கள் என்ன கருத்துகளை (மதிப்பீடு) சொல்கிறார்கள் என்பதை வைத்து, குழந்தைகளின் ஆளுமை வடிவம் பெறுகிறது.

எனவே, மாணவர் களை ஆசிரியர்கள் நேர்மறை எண்ணத்தோடு அணுக வேண்டும். நாளுக்குள் நாள் மாணவர்களிடம் மன அழுத்தம் அதிகரிக்கிறது. சரா சரியாக 1,000 குழந்தைகளில் 52 முதல் 100 பேர் நெருக்கடியான சூழலில் இருப்பதாக உணர்கின் றனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன’’ என்றார்.

கருத்தரங்கில் ‘தி லேனர்ஸ் கன்ஃப்லூயன்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் செந்தில் குமரன், ‘தி டீச்சர் பவுண்டேஷன்’ அமைப்பின் தலைவர் இந்திரா சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x