அதிமுக வேட்பாளர்கள் 10 பேர் மாற்றம்: ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுக வேட்பாளர்கள் 10 பேர் மாற்றம்: ஜெயலலிதா அறிவிப்பு
Updated on
1 min read

தமிழகம், புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர்கள் மொத்தம் 10 பேர் மாற்றப்பட்டுள்ளனர். ஆட்சி மன்ற குழு பரிசீலித்து இம்முடிவை எடுத்துள்ளதாக அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று (செவ்வாய்கிழமை) அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டார். அத்தொகுதியின் புதிய வேட்பாளராக வைகை செல்வன் அறிவிக்கப்பட்டார்.

திங்கள்கிழமையன்று ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்கள் 227 பேரது பட்டியலை வெளியிட்டார். கூடவே தோழமை கட்சிகளின் 7 வேட்பாளர்களையும் அறிவித்தார்.

புதிய வேட்பாளர்கள் பட்டியல்:

தமிழகம்:

1.தியாகராய நகர் - சத்தியநாராயணன்

2.மேட்டூர் - செம்மலை

3.காட்டுமன்னார் கோயில் (தனி) - முருகுமாறன்

4.பூம்புகார் - பவுன்ராஜ்

5.வேதாரண்யம் - ஓ.எஸ்.மணியன்

6.மன்னார்குடி - காமராஜ்

7.நாகர்கோவில் - நாஞ்சில் முருகேசன்

புதுச்சேரி மாநிலம்

8.திருபுவனை (தனி) : சங்கர்

காரைக்கால் மாவட்டம்

9. திருநள்ளார் - முருகையன்

10. காரைக்கால் தெற்கு - அசனா

****

அதிமுக வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விவரம்:

தியாகராயநகர் - சரஸ்வதி ரெங்கசாமி

மேட்டூர் - சந்திரசேகரன்

காட்டுமன்னார் கோயில் (தனி) - மணிகண்டன்

பூம்புகார் - நடராஜன்

வேதாரண்யம் - கிரிதரன்

மன்னார்குடி - சுதா

நாகர்கோவில் - டாரதி சேம்சன்

திருபுவனை (தனி) - சபாபதி

திருநள்ளார் - அசனா

காரைக்கால் தெற்கு - கணபதி

பிந்தைய அப்டேட்: பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஏற்கெனவே சி.வி.இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த வேட்பாளர் நீக்கப்பட்டு, சி.ஆர்.சரஸ்வதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in