

உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் இருக் கிறது என, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் மீன்வளப் பிரிவு பொது துணை இயக்குநர் ஜே.கே.ஜெனா தெரிவித்தார்.
இந்தியாவில் மீன்வள பாடத் திட்டத்தில் மாற்றம் செய்வது தொடர் பாக மீன்வள வல்லுநர்களின் 2 நாள் கலந்தாய்வுக் கூட்டம், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் மீன்வளப் பிரிவு பொது துணை இயக்குநர் ஜே.கே.ஜெனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 10 மில்லியன் டன் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் இதனை 16 மில்லியன் டன் அளவுக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், அறிவு சார்ந்த பணிகளையும் மேம்படுத்த வேண்டியது அவசியம். அதனை கருத்தில்கொண்டு மீன்வள பாடத் திட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மீன்வள வல்லுநர்களை உருவாக்க வேண்டும். அதுபோல சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல அச்சுறுத்தல்களும் இந்தத் துறை யில் உள்ளது. அவற்றை சமாளிக் கும் வகையிலும், மீன்களுக்கு ஏற் படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பாடத் திட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம்.
மீன்வளக் கல்லூரிகள், பல் கலைக்கழகங்களை கூடுதலாக தொடங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் என்றார்.