தமிழை எளிமையாக்கி மக்களுக்குத் தந்தவர் நா.முத்துக்குமார்: தமிழிசை புகழஞ்சலி

தமிழை எளிமையாக்கி மக்களுக்குத் தந்தவர் நா.முத்துக்குமார்: தமிழிசை புகழஞ்சலி
Updated on
1 min read

தமிழை எளிமையாக்கி தமிழக மக்களுக்குத் தந்தவர் நா.முத்துக்குமார். இந்த சின்ன வயதில் அவர் மறைந்துள்ளதை ஏற்க முடியவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

நா.முத்துக்குமார் மறைவு குறித்து தமிழிசை வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஆனந்தை யாழை மீட்டியவர் இன்று தமிழகம் சோக யாழை மீட்டுகிற அளவுக்கு விட்டு சென்றுள்ளார்.

அவரது திரைப்பாடல்கள் மட்டுமன்றி, கவிதைகளும் எனக்கு பிடித்தமானவை. தமிழை எளிமையாக்கி தமிழக மக்களுக்கு தந்தவர். இந்த சின்ன வயதில் அவர் மறைந்துள்ளதை ஏற்க முடியவில்லை. திறமையாளர் தங்களின் உடல் நலத்துக்கு முக்கியத்துவதும் கொடுக்க வேண்டும்'' என்று தமிழிசை கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in