

தமிழக சட்டப்பேரவைத் தேர் தல் தோல்வி மற்றும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர் பாக தேமுதிக பகுதிச் செயலாளர் கள், வட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய காந்த் மாவட்டவாரியாக ஆலோ சனை நடத்தி வருகிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் கடந்த 13-ம் தேதி விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ண கிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் அதிகமான பகுதி மற்றும் வட்ட, ஊராட்சி செயலாளர்களுடன் சென்னை கோயம்பேட்டில் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தின்போது, “உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்க வேண்டும். கட்சியின் மாவட்ட அமைப்புகளை சீர மைக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தது 2 முறையாவது விஜயகாந்த் வரவேண்டும்.
கடந்த காலங்களில் கோஷ்டி அரசியல், தலைமையை அணுக முடியாத நிலை போன்றவை தொண்டர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. அதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து நிர்வாகி களிடம் பேசிய விஜயகாந்த், ‘மக்கள் நலனுக்காகத்தான் மக்கள் நலக்கூட்டணியை தேர்வு செய்தோம். வேறு எந்த லாபத்துக்காகவும் அதை செய்ய வில்லை. கட்சியின் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி, பழையபடி வாக்குவங்கியை வலுப்படுத்துங்கள். உள்ளாட்சித் தேர்தலில் நமது பலத்தை நிரூபிக்க வேண்டும்” என்றார்.