

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் இயக்குநர் ரமணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. பருவமழை இயல்பு நிலையில் இருக்கும்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெறாமல் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
நேற்று (செவ்வாய்கிழமை) நிலவரப்படி அதிகபட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் 9 செ.மீ மழை பெய்துள்ளது" என்றார்.