

கடந்த 2015-ம் ஆண்டில் 4.6 லட்சம் பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப் பட்டுள்ளன என்று மண்டல பாஸ் போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் இதுகுறித்து கூறியதாவது:
சென்னை மண்டலத்தில் பாஸ்போர்ட்களை விரைவாக வழங்குவதற்காக பாஸ்போர்ட் சேவை மையங்கள் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த மையங்கள் மூலம் இதுவரை புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக 15 லட்சத்து 82 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 14 லட்சத்து 75 ஆயிரம் பாஸ் போர்ட்கள் விநியோகம் செய்யப் பட்டுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 4 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப் பட்டு 4 லட்சத்து 6,300 பாஸ்போர்ட் கள் விநியோகம் செய்யப்பட்டன. எங்கள் அலுவலகத்தைப் பொறுத்தவரை இதை ஒரு சாதனையாக கருதுகிறோம்.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்களின் ஒத்துழைப்போடு இது நிகழ்த்தப்பட்டது. மேலும், காரைக்கால், விழுப்புரம் மற்றும் தருமபுரியில் நடத்தப்பட்ட பாஸ்போர்ட் மேளா மூலம் ஆயிரத்து 43 பேர் பயனடைந்தனர்.
இதைத் தவிர, குடியேற்றத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப் போடு காரைக்கால், கடலூர், விழுப்புரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் குடியேற்றத் துறை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வசதிக்காக இந்த மாத இறுதிக்குள் புதுச்சேரி யில் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்பட உள்ளது.இவ்வாறு பாலமுருகன் கூறினார்.