கருணாசின் வாழ்த்துப் பாட்டு: முதல்வர் மகிழ்ச்சி

கருணாசின் வாழ்த்துப் பாட்டு: முதல்வர் மகிழ்ச்சி
Updated on
1 min read

சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் வெளியிட்ட அறிவிப்பைப் பாராட்டும் விதமாக கருணாஸ் பாடிய பாட்டை கேட்டு முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சியடைந்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்து, மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. இடையில், முதல்வர் ஜெயலலிதா, பேரவை விதி 110-ன் கீழ் வனத்துறை மற்றும் நீதித்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளை, உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் மற்றும் அமைச்சர்கள் வரிசையாக வாழ்த்தி பேசினர். இதில், கருணாஸ் பேச்சை தொடங்கும் போது, ‘‘தெய்வமே... தெய்வமே... நன்றி சொல்வேன் தெய்வமே... தேடினேன்...’’ என்ற பாடலை பாடினார். தொடர்ந்து திட்டங்களைப் பாராட்டிவிட்டு, இந்த திட்டங்களால் மக்கள் உங்களை,‘‘ நீங்கள் நல்லா இருக்கோணும் நாடு முன்னேற... நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற...’’ என்ற பாடலையும் பாடினார். அப்போது, பேரவையில் அதிமுக உறுப் பினர்கள் பாடலுக்கு ஏற்றபடி மேஜையைத் தட்டி உற்சாகப்படுத்தினர்.

கருணாசின் பேச்சை உன்னிப்பாக கவனித்த முதல்வர் ஜெயலலிதா, அவர் ராகத்துடன் பாடியதையும், அதிமுக உறுப்பினர்களின் தாளத்தையும் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனால், அவையில் சிறிது நேரம் கலகலப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in