காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு: எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின் கருத்து

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு: எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின் கருத்து
Updated on
1 min read

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்க் கட்சிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்க வேண்டிய தீர்ப்பாகும். தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நடத்திய உணர்வுபூர்வமான போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் இந்தத் தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக செயல் படுத்த வேண்டும். இதற்காக பிரதமரை நேரில் சந்தித்து மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழகத்துக்கு வரும் 27-ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற் கத்தக்கது. ஆனாலும், இந்த தண்ணீர் மட்டுமே விவசாயத்துக்கு போதாது. இதுவரை தண்ணீர் திறப்பதில் வெளிவந்துள்ள உச்ச நீதிமன்ற உத்தரவுகள் தமிழக விவசாயிகளுக்கு ஆறு தல் அளிப்பதாகவும், அவர் களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.

இவ்வாறு ஸ்டாலின் கூறி யுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in