கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் பொங்கல் பண்டிகைக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள்: வரும் 11-ம் தேதி முதல் 13 வரை இயங்கும்

கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் பொங்கல் பண்டிகைக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள்: வரும் 11-ம் தேதி முதல் 13 வரை இயங்கும்
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங் கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படு கின்றன.

இதுதொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங் கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.11-ம் தேதி முதல் ஜன.13-ம் தேதி வரை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள், கீழ்காணும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக் கப்பட உள்ளன.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் அடையாறு காந்தி நகரில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

பூவிருந்தவல்லி

வேலூர் மார்க்கமாக பூவிருந்த வல்லி வழியாக ஆரணி, ஆற்காடு, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக பண்ருட்டி, கும்ப கோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் தாம்பரம் சானடோரி யம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

அண்ணா நகர்

செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணா நகர் (மேற்கு) மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், அதாவது, மயிலாடு துறை, நாகப்பட்டினம், வேளாங் கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் திண்டிவனம் வழியாக விழுப்புரம், பண்ருட்டி, நெய் வேலி, கடலூர், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும்.

அனைத்து பேருந்து நிலையங் களுக்கும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in