

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்புப் பணியின் போது விபத்தில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
கட்டிட இடிப்புப் பணியின் போது ஜா கட்டர் இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதைச் சரிசெய்யும் போது கட்டிட இடிபாடுகள் தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளது.
இதில் ஜா கட்டர் இயந்திரத்தின் ஓட்டுநரின் உதவியாளர் சரத் என்பவர் பலத்த காயமடைந்து பலியானார், இன்னுமொருவருக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்த துயர சம்பவத்தையடுத்து கட்டிட இடிப்புப் பணி நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு காவல்துறை துணை ஆய்வாளர் வந்து ஆய்வு செய்தார்.