

சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று தொடங்குகிறது. பாதுகாப்பு பணியில் 15 ஆயிரத் துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 5-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சிவசேனா, இந்து மக்கள் கட்சி, பாரத இந்து முன் னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பு கள் சென்னையில் பல்வேறு இடங் களில் 2,696 விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்து வரு கின்றனர். இந்த சிலைகள் இன்று முதல் 14-ம் தேதி வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படவுள்ளன. இதில் பெரும்பாலான அமைப்புகள் 11-ம் தேதி (நாளை) விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த உள்ளன.
இந்நிலையில் விநாயகர் சிலை ஊர்வலப் பாதுகாப்பு ஏற் பாடுகள் குறித்து சென்னை பெரு நகரக் காவல் துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ், காவல் உயர் அதி காரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அனைத்து ஊர்வலங் களும் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு அனுமதிக்கப்பட்ட சாலைகளில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
சிலைகளைக் கரைப்பதற்காக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைப் பகுதியிலும், நீலாங்கரை பல்கலை நகர் கடற்கரை பகுதியிலும், காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியிலும், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை மற்றும் கார்போரண்டம் யூனிவர்சல் கம்பெனியின் பின்புறம் உள்ள கடல் பகுதி மற்றும் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியிலும், கிரேன்கள் நிறுவப்பட்டுள்ளன. சிலைகளை கடலில் கரைக்க உரிய சிறப்பு முன்னேற்பாடுகளை போலீஸார் செய்துள்ளனர்.
சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவதற்கு வழக்கமாக அனுமதிக்கப்படும் பாதையில் மட்டுமே இந்த வருடமும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊர்வலப் பாதையிலுள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய பகுதிகளில் அதிக அளவில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 4 கூடுதல் ஆணையர்கள், 6 இணை ஆணையர்கள், 22 துணை ஆணையர்கள், 60 உதவி ஆணையர்கள் உட்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சென்னை பெருநகரக் காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் 135 இடங்களில் அதிரடிப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.