நீதித்துறையின் வளர்ச்சிக்கு உகந்தது எது?- தலைமை நீதிபதி கருத்து

நீதித்துறையின் வளர்ச்சிக்கு உகந்தது எது?- தலைமை நீதிபதி கருத்து
Updated on
1 min read

தேச பிதா காந்தியடிகள் அந்நிய ஆட்சியை விரட்ட ஒத்துழையா மையை கடைபிடித்தார். ஆனால் அந்த ஒத்துழையாமையை நமக்கு நாமே கடைபிடிப்பது நீதித்துறையின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என சுதந்திர தினவிழாவில் கொடியேற்றி வைத்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பேசினார்.

நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எப்) அணி வகுப்பு மரியா தையை ஏற்று தேசியக் கொடியேற்றி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

மகாத்மா காந்தியடிகள் அந்நிய ஆட்சியை விரட்டி நமக்கு சுதந் திரம் பெற்றுத் தருவதற்காக ஒத்துழையாமையை ஒரு கருவி யாக கடைபிடித்தார். ஆனால் அந்த ஒத்துழையாமையை இப் போது நமக்கு நாமே கடைபிடிப்பது நீதித்துறையின் வளர்ச்சிக்கு உகந் தது அல்ல.

எல்லோரும் ஒரேமாதிரியான கருத்துக்களை கொண்டிருப்பது கிடையாது. ஒரு சாதாரண குடும்பத் திலும் கூட மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். ஆனால் அந்த சூழலிலும் அவற்றைக் களைந்து எவ்வாறு குடும்பத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்வது என்ற சிந்தனைதான் மேலோங்கும்.

அதுபோலத்தான் நாடும். பல தரப்பட்ட எண்ணங்கள், சிந்தனை கள், கலாச்சாரம் இருந்தாலும் தேசம் என வரும்போது அனைவரும் ஒன்றுபட்டு விடுகிறோம். நமக்குள் ஒற்றுமை இல்லை எனில் முன்னேற்றம் என்பது கடினம் தான்.

ஜனநாயகத்தின் முக்கிய அங்க மாக விளங்கும் நீதித்துறை மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டும் இடமாக திகழ வேண்டும்.

நல்ல கட்டமைப்பு, சரியான எண்ணிக்கையில் நீதிபதிகள் இருந்தால்தான் நீதித்துறை சிறந்து விளங்க முடியும். ஒழுக்கம் இல்லாத எந்த நிறுவனமும் வளர்ச்சி பெறாது. ஆகவே ஒழுக்கம் மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நீதித்துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கு தலைமை நீதிபதி பரிசளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in