புதுக்கோட்டையில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டையில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு
Updated on
1 min read

புதுக்கோட்டை அருகே ராப்பூசல் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

ராப்பூசல் கிராமத்தில் வாடிவாசல் திறக்கப்பட்டதும், காளைகள் சீறிப் பாய்ந்தன. 50-க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டுக்காக அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டு, இந்த அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை மாலை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் வழங்கி, அந்த உத்தரவை பிறப்பித்தார்.

ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டாலும் நிரந்தர தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினாவிலும், அலங்காநல்லூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, புதுக்கோட்டை அருகே ராப்பூசல் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in