

சென்னை மோனோ ரயில் திட்டத்துக்கான டெண்டர் 2வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வண்டலூர்-வேளச்சேரி, பூந்தமல்லி-கத்திப்பாரா மற்றும் பூந்தல்லி-வடபழனி இடையே 3 தடங்களில் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டது. அது பல கட்டங்களைத் தாண்டி இறுதி செய்யப்பட இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ரத்து செய்யப் பட்டது. இதற்கு முன்பு ஏற்கெனவே ஒருமுறை டெண்டர் விடப்பட்டு ரத்தானது.
தற்போது, இந்த டெண்டரை இரண்டு பிரிவாக பிரித்து, பூந்தமல்லி-கத்திப்பாரா மற்றும் பூந்தமல்லி-வடபழனி திட்டத்துக்கு முதலில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. வண்ட லூர்-வேளச்சேரி வழித்தடத்துக்கு சிறிது இடைவெளி விட்டு டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மோனோ ரயில் திட்டத்துக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.