Published : 07 Oct 2014 09:33 AM
Last Updated : 07 Oct 2014 09:33 AM

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

காலாண்டு விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. முதல் நாளில் ஒரு கோடி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம், நோட்டு, சீருடை வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

பள்ளிகள் இன்று திறப்பு

காலாண்டு விடுமுறை முடிவடைந்து அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முதலில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அக்டோபர் 6-ம் தேதி பக்ரீத் பண்டிகை விடுமுறை விடப்பட்டதால் பள்ளி கள் திறக்கும் தேதி 7-ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி, காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகின்றன.

1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு முதல் நாளன்றே 2-வது பருவத்துக்கான

(அக்டோபர்-டிசம்பர் வரை) பாடப் புத்தகங்கள், நோட்டுகள், 3-வது செட் சீருடைகள் உடனடியாக வழங்கப்படும்.

ஒரு கோடி மாணவர்கள் பயன்

இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு கோடி மாணவ-மாணவிகள் பயன் பெறுவர் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x