

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போரா டியவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவனிடம் நேற்று முறையீடு செய்தார்.
அப்போது, ‘‘ஜல்லிகட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது போலீஸார் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். கலவரத்திற்கு காரணமே போலீஸார்தான். அதற் கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இதுதொடர்பாக போலீ ஸிலும் புகார் அளித்துள்ளேன். எனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்’’ என்றார்.
அவசரமாக விசாரிக்க மறுத்த நீதிபதி ஆர்.மகாதேவன், இது தொடர்பாக மனுதாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை (இன்று) விசாரிக்கிறேன், என்றார்.
இதேபோல, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுக்கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘‘இந்திய கலாச்சாரம் மற்றும் இறையாண்மைக்கு எதி ராக செயல்படும் பீட்டாவை தடை செய்ய மத்திய, மாநில அரசுக ளுக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக பேசும் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ராதாராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பாக வழக்கறிஞர் சூரியபிரகாசம் முறையீடு செய்தார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி ஆர்.மகாதேவன், இந்த வழக்கை நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறினார்.