Published : 02 Jun 2017 08:45 AM
Last Updated : 02 Jun 2017 08:45 AM

‘தி இந்து’ தமிழ் - எஸ்பிஆர் மார்க்கெட் ஆப் இந்தியா இணைந்து நடத்தும் ‘ஜிஎஸ்டி பற்றி தெரிந்து கொள்வோம்’ பயிலரங்கம்: சென்னையில் 4-ம் தேதி நடக்கிறது

ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. கிட்டத்தட்ட பல பொருள்களுக்கு வரி விகிதங்கள் முடிவாகிவிட்டன. வரி விலக்கு குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஜிஎஸ்டி சட்டத்தை செயல்படுத்துவதற்கு வர்த்தகர்கள் மத்தியில் ஆதரவு எதிர்ப்பு என இரு விதமான மனநிலை உள்ளது. ஆனாலும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு மிகத் தீவிரமாக உள்ளது.

ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு வரி ஏய்ப்பில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது வரி ஏய்ப்பு தொகையில் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கவும் ஜிஎஸ்டி சட்டம் வகை செய்கிறது. இதனால் ஆரம்பக் கட்டத்தில் அபராதம் விதிக்க வேண்டாம் என வர்த்தக அமைப்புகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன. ஜிஎஸ்டி எப்படி கணக்கிடப்படும்? இதனால் வர்த்தகம் பாதிக்கப்படுமா? என்கிற குழப்பமும் பலருக்கு உள்ளது.

இதற்காகவே இந்த சட்டத்தை புரிந்துகொள்ள உதவும் வகையில், புதிய வரி விதிப்பு முறையை செயல்படுத்துவதில் உள்ள குழப்பங்கள், எப்படி செயல்படுத்துவது, வரிச் சலுகைகள் என்ன? பழைய வரி விதிப்பு முறைக்கும் ஜிஎஸ்டிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்று மத்திய அரசு விளக்கி வருகிறது.

இதற்காக மத்திய கலால் வரித்துறையினர் ’தி இந்து’ தமிழ் நாளிதழுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மேலும் தென்னிந்திய தொழில் வர்த்தக சபையும் இந்த முயற்சியில் கைகோர்த்துள்ளது. சென்னையில் ஜூன் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ’ஜிஎஸ்டி பற்றி தெரிந்து கொள்வோம்’ என்ற தலைப்பில் புதிய வரிவிதிப்பு முறை பற்றிய சிறப்பு பயிலரங்கம் நடைபெற உள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள எஸ்பிஆர் மார்க்கெட் ஆப் இந்தியா வர்த்தக மையத்தில் காலை 9.30 மணிக்கு இது நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் 8082807690 என்ற செல்போன் எண்ணுக்கு GSTCH Name Name of the organization என்ற முறையில் குறுந்தகவல் அனுப்பி உங்கள் வருகையை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

(குறிப்பு: தற்போதுள்ள வரிவிதிப்பு முறையிலிருந்து ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் இணைய விரும்பும் வணிகர்களுக்கு இந்த பயிலரங்கில் அனைத்து உதவிகளும் செய்யப்படும். தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து JPG / PDF வடிவில் pen drive-ல் நிகழ்விடத்துக்கு கொண்டு வரவும். ஆவணங்களை சரிபார்க்க அசல் ஆவணங்களை காண்பிப்பது அவசியம்.)



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x