

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப் பதாவது: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் வெப்ப நிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்சமாக 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
நேற்றைய நிலவரப்படி, தமிழகத் தில் அதிகபட்சமாக வால்பாறை யில் 49.2 மி.மீ, கன்னியாகுமரியில் 8.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலை மதுரையில் அதிகபட்ச மாக 38.4 செல்சியஸ், சென்னை மற்றும் பரங்கிப்பேட்டையில் 38 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.