ஜெயலலிதாவை மேனகா வாழ்த்தியது அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை பாதிக்காது: பாஜக

ஜெயலலிதாவை மேனகா வாழ்த்தியது அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை பாதிக்காது: பாஜக
Updated on
1 min read

ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி எழுதியுள்ள கடிதத்தால் தமிழகத்தில் அதிமுகவை எதிர்க்கும் பாஜகவின் கொள்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அக்கட்சியின் தேசியச் செயலர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியிருந்தார். அதில், "இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். எனது ஆதரவு, அன்பு, கருணை எப்போதும் உங்களுக்கு உண்டு. வாழ்வில் பல்வேறு கடினமான நிகழ்வுகளை சந்தித்துள்ளீர்கள். அவற்றை மிகவும் தைரியத்துடன், கட்டுப்பாட்டுடன் நீங்கள் சமாளித்திருப்பது குறிப்பிடத்தக்கது" என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முரளிதர்ராவ், "மேனகா காந்தி, அதிமுக பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தால் தமிழகத்தில் அதிமுகவை எதிர்க்கும் பாஜகவின் கொள்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை" என தெரிவித்துள்ளார். தமிழகத்தில், அதிமுகவை பாஜக தொடர்ந்து எதிர்க்கும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in