

போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா நேற்று ஆற்றிய உரை:
தமிழ்நாட்டில் சாலைக் கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத் தவும், விரிவுப்படுத்தவும் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சீரான வாகனப் போக்குவரத்தை உறுதி செய்ய, புறவழிச் சாலை கள், வெளிவட்டச் சாலைகள், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள் போன்றவை அமைக்கப்படும். சாலை களின் தரத்தினை மேம் படுத்துவதற்காக, ‘ஒருங்கி ணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமும்’ ‘செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையும்’ தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
உலக வங்கியின் உதவியு டன், ரூ.5,171 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம் 2’, தமிழகத்தின் சாலைக் கட்டமைப்பை மேலும் வலுப் படுத்த உதவும்.
இவ்வாறு ஆளுநர் தெரிவித்துள்ளார்.