

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக் கழகத்தில் ஜுன் 27-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 13-வது நாளான நேற்றைய கலந்தாய்வுக்கு 5112 அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்களில் 1896 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரியை தேர்வு செய்த 3,218 பேர் ஒதுக்கீட்டு ஆணை பெற்றனர்.
கடந்த 13 நாட்களில் 40 ஆயிரத்து 524 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை ஜெ.இந்துமதி தெரிவித்தார்.
இன்றைய கலந்தாய்வுக்கு 159.25 முதல் 155.75 வரை பெற்றுள்ள மாணவ-மாணவிகள் அழைக்கப் பட்டுள்ளனர்.