

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண் டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் நெடுஞ்சாலைகள் சாதாரண சாலைகளாக மாற்றப் படுவதை தடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய, மாநில நெடுஞ்சாலை களில் இருந்து 500 மீட்டர் தொலை வில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழகம் உள் ளிட்ட பல மாநிலங்களில் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன.
அந்தக் கடைகளை வேறு இடங்களில் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் மாநில அரசுகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே உத்தரப் பிரதேசம், பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் நெடுஞ்சாலைகளை மாநகர, நகர, மாவட்டச் சாலை கள் என பெயர் மாற்றியுள்ளன. இதைப் பின்பற்றி தமிழகத்தி லும் தேசிய, மாநில நெடுஞ் சாலைகளை சாதாரண சாலை களாக மாற்ற அரசு திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் இந்த முயற் சியை அனைத்துக் கட்சிகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுக (அம்மா) தவிர மற்றக் கட்சித் தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந் திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சார்பில் முன் னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், நடிகர் கமல்ஹாசன் உள் ளிட்டோரை பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு நேற்று நேரில் சந்தித்து ராமதாஸின் கடிதத்தை வழங்கினார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடு மாறன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார் ஆகி யோருக்கான கடிதங்களை அவர்களது அலுவலகங்களில் பாலு வழங்கினார்.
கே.பாலு தகவல்
இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் பேசிய கே.பாலு, ‘‘தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதும் முழு மதுவிலக்கை அமல்படுத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆனால், இந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய் யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.
நெடுஞ்சாலைகளை சாதாரண சாலைகளாக மாற்றும் தமிழக அரசின் முயற்சியை எதிர்க்க வேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் வலியுறுத் தினோம். இது தொடர்பாக ராமதாஸ் எழுதிய கடிதத்தை வழங்கினோம். மதுவிலக்கு விஷயத்தில் பாமகவின் முயற் சியை பாராட்டிய அவர்கள், எங்களின் கோரிக்கைகக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக கூறினர்’’ என்றார்.