

அதிமுக ஆட்சியில், பாஜக எந்தவித குறுக்கீடும் செய்யவில்லை என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கூறினார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்தியப் பிரதேசத் தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எதிர்பாராதது. இந்த விஷயத்தை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியினர் பெரிதாக்குகின்றனர். விவசாயிகள் பிரச்சினைக்கு கடந்த காலத்தில் ஆட்சி புரிந்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளே காரணம். ஆனால், மத்திய பாஜக அரசு, விவசாயிகளின் 13 கோரிக்கைகளில் 11 கோரிக்கைகளை நிறைவேற் றியுள்ளது. நீர்ப்பாசனத்துக்காக ரூ.55 கோடி ஒதுக்கியுள்ளது.
இறைச்சிக்காக மாடுகள் விற் பனை செய்வதை தடை செய்யும் சட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியில் பாஜக எவ்விதக் குறுக்கீடும் செய்யவில்லை. தேர் தலுக்கு முன், ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, தற் போதுள்ள அதிமுக அணிகள் ஒன் றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
முன்னதாக திருப்பூரில் மத்திய அரசின் 3 ஆண்டுகள் சாதனை விளக்கக் கண்காட்சியை வெங் கய்ய நாயுடு தொடங்கிவைத்துப் பேசியதாவது: மோடி தலைமை யிலான ஆட்சியில் ஊழல், லஞ்ச மற்ற, வெளிப்படையான ஆட்சி நடப்பதால் சாதனை விளக்கக் கண் காட்சியை நடத்துகிறோம்.
வறுமை, வேலையின்மை, அறியாமை ஆகிய சமூகத் தீமை களை ஒழிப்பதே பிரதமர் மோடியின் எண்ணம். மத்திய அரசின் முதல் நோக்கம் கறுப்புப் பணத்தை ஒழிப்பதுதான். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், ரூ.11 லட்சம் கோடி வங்கிகளுக்கு வந்துள்ளது. 91 லட்சத்துக்கும் மேலான மக்கள், வரி வலைக்குள் வந்துள்ளனர்.
கடந்த 18 மாதங்களுக்குள் 28 கோடிக்கும் மேற்பட்டோர், புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனர். இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், மாணவர் கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார் மோடி.
தமிழகத்தில் ஓபிஎஸ் ஆட்சி என்றாலும், இபிஎஸ் ஆட்சி என்றா லும் முன்னேற்றம் என்பதுதான் எங்கள் நோக்கம். மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது. அவர்களுடனான உறவு, எங்க ளுக்கு எப்போதும் இருக்கும். விவ சாயிகளின் பிரச்சினைகளை அர சியலுக்காக பயன்படுத்தக்கூடாது.
மொழி கற்பது அவரவர் முடிவு. எவ்வளவு மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள் ளுங்கள். இவ்வாறு அவர் பேசி னார்.
உத்தரபிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ சு.குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.