

கோவையில் மர்ம நபர்களால் இந்து முன்னணி பிரமுகர் சசிக் குமார் படுகொலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து போலீஸ் ஜீப், கடைக்கு தீ வைக்கப்பட்டது. இறுதி ஊர்வலத்தின்போது, வழிபாட்டு தலங்கள், கடைகள், வீடுகள் உள்ளிட்டவை மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவியது.
கெம்பட்டி காலனி, ஆர்.எஸ். புரம் பகுதிகளில் சில வழிபாட்டு தலங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கோட் டைமேடு பகுதிக்கு இந்து முன் னணியினர் முழக்கங்களை எழுப் பியபடி ஊர்வலமாகச் சென்ற போது, கடைகள், உணவகங்கள், வீடுகள் உள்ளிட்டவை மீது கற்கள் வீசப்பட்டன. சாலையில் நிறுத்தப் பட்டிருந்த ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனி டையே மற்றொரு தரப்பினரும் கற் களை வீசி தாக்குதல் நடத் தினர். இதில் படுகாயமடைந்த காவலர் பாலசுப்பிரமணியம், சிகிச்சைக்காக மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறுதி ஊர்வலம் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள வட கோவை அஹ்லே சுன்னத் ஜமாத் அருகே வந்தபோது இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி தாக்கிக்கொண்டதில், ஏராளமானோர் காயம் அடைந்தனர். காவல்துறை வாகனங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. மூடப்பட்டி ருந்த கடைகள் பல அடித்து நொறுக் கப்பட்டன.
துடியலூர் பேருந்து நிலையம் சிக்னல் அருகே நின்றிருந்த ஒரு போலீஸ் ஜீப்புக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அதன் அருகே ஒரு கடையை சூறையாடி தீ வைத்தனர். போலீஸார் லேசான தடியடி நடத்தி கும்பலைக் கலைத்தனர்.
சம்பவ இடத்துக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், திருச்சி டிஐஜி அருண், கோவை எஸ்பி ரம்யா பாரதி, திருப்பூர் எஸ்பி உமா உள்ளிட்டோர் விரைந்து வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினர். அசம்பாவிதங் களை தவிர்க்க வெளி மாவட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிக் காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
துடியலூர் பேருந்து நிலையம் சிக்னல் அருகே தீ வைக்கப்பட்ட போலீஸ் ஜீப்.