

போக்குவரத்து நெரிசல் பகுதி களில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி சுரங்கப்பாதை யில் சாலை பராமரிப்பு பணி யினை சென்னை மாநகராட்சி மேற் கொண்டு வருகிறது. அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இதனால் நுங்கம்பாக் கம் நெடுஞ்சாலை, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு சந்திப்பு மற்றும் ஈகா திரையரங்கம் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் சிக்குகின்றன. நேற்று காலை 9 மணி முதல் 12 மணி வரை இந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், சென்னை பெரு நகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் போக்கு வரத்து நெரிசல் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ஈகா திரையரங்கம் சந்திப்பு ஆகிய இடங்களுக்கு நேரடியாகச் சென்று, அங்கு போக்கு வரத்துப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் போக்குவரத்து காவல் இணை ஆணையர் பவானீஸ்வரி மற்றும் காவல் அதிகாரிகளுடன் கலந்துரையாடி போக்குவரத்து சீராக செல்ல, சில ஆலோசனைகள் வழங்கினார்.