

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களாக தமிழகத் தின் மேற்கு பகுதியிலிருந்து வறண்ட காற்று வீசி வருகிறது. மேலும் கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை குறைந்துள்ளது. அதனால் தமிழகத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும். தமிழகத்தை பொருத்த வரை வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே, ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.