Last Updated : 04 Jun, 2015 08:27 AM

 

Published : 04 Jun 2015 08:27 AM
Last Updated : 04 Jun 2015 08:27 AM

தமிழகத்திலும் மேகி நூடுல்ஸ்க்கு தடை வருமா?- 65 மாதிரிகள் சோதனை; ஓரிரு நாளில் முடிவு

ரசாயன உப்பு அதிகளவு கலந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததை ஒட்டி, தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 65 மேகி நூடுல்ஸ் மாதிரிகளை சோதனை செய்து வருகின்றனர்.

‘மேகி நூடுல்ஸ்’ பாக்கெட்டில் அளவுக்கு அதிகமான ரசாயன உப்பு (மோனோசோடியம் க்ளூட்ட மேட்) மற்றும் ஈயம் (லெட்) கலந் திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறை, மேகி நூடுல்ஸை சோதனை செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. சோதனை முடிவில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், உத்தரப் பிரதேசம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்துள்ளன. தயாரிப்பு நிறுவன அதிகாரிகள், மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

65 மாதிரிகள் சோதனை

இது தொடர்பாக தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

‘‘மத்திய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எல்லா மாவட் டங்களிலும் 65 மேகி நூடுல்ஸ் மாதிரிகளை எடுத்து இருக்கிறோம். சென்னை கிண்டி, கோவை, சேலம் போன்ற பல்வேறு இடங்களில் உள்ள எங்களுடைய ஆய்வகங் களில் மேகி நூடுல்ஸை சோதனை செய்து வருகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் சோதனை முடிவு கள் வந்துவிடும். அந்த சோதனை முடிவுகளை மத்திய உணவு பாது காப்புத் துறைக்கு அனுப்புவோம். அதன்பின் மத்திய உணவு பாது காப்புத்துறை எடுக்கும் முடிவு தமிழகத்தில் அமல்படுத்தப்படும்.’’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு

தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநரும், இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக தலைவருமான டாக்டர் எஸ்.இளங்கோ கூறியதாவது:

‘‘அதிக ரசாயன உப்பு மற்றும் ஈயம் கலந்துள்ள மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன. தற்போது இந்தியா விலும் ஒவ்வொரு மாநிலமாக தடை விதிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும் சிறிதும் தயங்கா மல் மேகி நூடுல்ஸை தடை செய்ய வேண்டும். மேகி நூடுல்ஸ் மட்டு மல்லாமல் பல சிப்ஸ் வகைகளிலும் ரசாயன உப்பு அளவுக்கு அதிக மாக கலக்கப்பட்டுள்ளது. அதனால் ரசாயன உப்பு அதிகமாக கலந்துள்ள உணவுப் பொருட்களை சோதனை செய்து அனைத்துக்கும் தடை விதிக்க வேண்டும். இந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன், உடலில் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படும்.

குழந்தைகளை குறி வைத்தே இதுபோன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரசாயன உப்பு கலந்த உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டாம்.’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உங்கள் குரலில் புகார்

சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த செந்தில் ‘தி இந்து’வின் உங்கள் குரலில் கூறும்போது, “குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் உணவுப் பொருட்கள் சிங்கப்பூரில் 1990-ம் ஆண்டிலேயே தடை செய்யப்பட்டுள்ளது. அதன்பின் அந்த நிறுவனங்கள் பணத்தை கொடுத்து முறைகேடாக இந்தி யாவில் நுழைந்துவிட்டன. இது போன்ற அனைத்து உணவுப் பொருட்களையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேகி நூடுல்ஸ் மட்டுமல்லாமல் பல சிப்ஸ் வகைகளிலும் ரசாயன உப்பு அளவுக்கு அதிகமாக கலக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்துக்கும் தடை விதிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x