

வாணியம்பாடி அருகே பாலாறு தடுப்பணையில் குதித்து தற் கொலை செய்துகொண்ட விவ சாயி சீனிவாசனின் குடும்பத்தி னருக்கு திமுக தலைவர் கருணா நிதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரி வித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கருணாநிதி (திமுக தலைவர்)
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் (45) என்ற விவசாயி, மழை பெய்தாலும் பாலாற்றில் இனி ஒரு சொட்டு கூட தண்ணீர் வராது. இனி என்ன செய்வது? என புலம்பியபடி பாலாறு தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள் ளார். இந்த துயரச் சம்பவம் வேலூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ. மட்டுமே ஓடும் பாலாற்றின் குறுக்கே 5 அடி உயரத்தில் 22 அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் 20 அடி வரை ஆந்திர அரசு உயர்த்தி வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனாலும், தடுப்பணையின் உயரத்தை அதிகப்படுத்துவதில் ஆந்திர அரசு வேகம் காட்டி வருகிறது. எனவே, உச்ச நீதிமன்ற வழக்கை விரைவுபடுத்தி இதற்கு தடையாணை பெற வேண்டும். தடுப்பணை பிரச்சினையில் தற்கொலை செய்துகொண்ட சீனிவாசன் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்)
பாலாறு பாசன விவசாயிகளின் கொந்தளிப்பான மனநிலைக்கு சீனிவாசனின் மரணம் ஒரு சான்றாகும். இவரது குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும். மத்திய பாஜக அரசு, பாலாற்றில் தடுப்பணைகள் கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கைகளை எப்போதும் போல வேடிக்கை பார்த்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை துரிதப்படுத்தி பாலாற்றில் தமிழ கத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்)
சீனிவாசனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். புல்லூர் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச் சினையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்)
பாலாற்று தடுப்பணையில் குதித்து விவசாயி சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சீனிவாசன் குடும் பத்தினருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வே.துரைமாணிக்கம் உள் ளிட்டோரும் சீனிவாசன் தற்கொலைக்கு இரங்கல் தெரி வித்துள்ளனர்.