தீபா பேரவை சார்பில் அண்ணா நினைவு நாள் விழா: போலீஸ் இடையூறு செய்ததாக முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு

தீபா பேரவை சார்பில் அண்ணா நினைவு நாள் விழா: போலீஸ் இடையூறு செய்ததாக முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு
Updated on
1 min read

கோவையில் ஜெ.தீபா பேரவை சார்பில் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு போலீஸார் பல்வேறு இடையூறுகளை விளைவித்ததாக முன்னாள் எம்எல்ஏ தா.மலரவன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை சிவானந்தா காலனி பகுதியில் ஜெ.தீபா பேரவை சார்பில் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் தா.மலரவன், மா.ப.ரோகிணி, மாநகராட்சி மண்டலக் குழு முன்னாள் தலைவர் ஜி.ரவீந்திரன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர், முன்னாள் எம்எல்ஏ தா.மலரவன் நிருபர்களிடம் கூறிய தாவது: கோவை வ.உ.சி. மைதானத்தில் இருந்து ஊர்வல மாகப் புறப்பட்டு, அவிநாசி சாலை யில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க முடிவு செய்து, மாநகர காவல் துறை துணை ஆணையரிடம் கடந்த 30-ம் தேதி மனு அளித்தோம். இந்நிலையில், நேற்று முன்தினம் எங்களை அழைத்துப் பேசிய உதவி ஆணை யர் மற்றும் போலீஸார், ஊர்வலம் செல்ல அனுமதிக்க முடியாது என்ற னர். அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கவும் அனுமதி மறுத்து விட்டனர். வேறு வழியின்றி சிவா னந்தா காலனி பகுதியில் அண்ணா படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த தொண்டர்களை திசை திருப்பி விட்டனர். இதையும் மீறி ஏராளமான தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

எந்த சூழ்நிலையிலும், ஜெ.தீபா வுக்கு பெருகும் ஆதரவையும், தொண்டர்களின் எழுச்சியையும் தடுக்க முடியாது. தொடர்ந்து, ஜெ.தீபா பேரவை சார்பில் சிறப் பாகச் செயல்படுவோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in