விவசாயிகளுக்கு ஆதரவாக கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தை சங்கிலியால் பூட்டி போராட்டம்; 6 பேர் கைது - போக்குவரத்து ஸ்தம்பித்தது; பொதுமக்கள் அவதி

விவசாயிகளுக்கு ஆதரவாக கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தை சங்கிலியால் பூட்டி போராட்டம்; 6 பேர் கைது - போக்குவரத்து ஸ்தம்பித்தது; பொதுமக்கள் அவதி
Updated on
2 min read

விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத் திய அரசைக் கண்டித்தும் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தைப் பூட்டி போராட்டம் நடத்திய திரைப்பட இயக்குநர் கவுதமன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பரபரப்பான காலை நேரத்தில் போராட்டம் நடத்திய தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள், அலுவலகம் செல் பவர்கள் அவதிக்குள்ளாகினர்.

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித் தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, ஹைட்ரோகார்பன் திட் டத்தை ரத்து செய்வது, மீனவர் களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவது ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கவுதமன் தலைமையில் 50 பேர்

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் மாணவர், இளைஞர் அமைப்பினர் சுமார் 50 பேர் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலப் பகுதி யில் நேற்று காலை திடீரென திரண்டனர். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதர வாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்ட அவர்கள், கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து விமான நிலையம் செல்லும் மேம்பாலப் பாதையின் குறுக்கே சாலையை மறித்து இரும்புச் சங்கிலியால் கட்டி பூட்டு போட்டனர். இதனால் விமான நிலையம் ஜிஎஸ்டி சாலை, போரூர், வடபழனி, கிண்டி அண்ணா சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், விமான நிலையம் செல்பவர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனங் களும் வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டன.

இதையடுத்து, கவுதமன் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரை யும் பரங்கிமலை போலீஸார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். மேம்பாலத்தில் போடப்பட்டி ருந்த சங்கிலி, பூட்டை உடைத்து வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு, படிப்படியாக வாகனப் போக்குவரத்து சீரானது.

போராட்டம் குறித்து செய்தி யாளர்களிடம் இயக்குநர் கவுதமன் கூறியதாவது:

வறட்சியாலும், நஷ்டத்தாலும் 350 விவசாயிகள் இறந்துள்ளனர். நாங் கள் உருவாக்கிய எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். காட்டை அழித்து உருவாக்கப்பட்ட சிலையை திறந்து வைக்க மோடி வருகிறார். நமக்கு உணவு கொடுக்கும் விவசாயிகளை அவரால் சந்திக்க முடியவில்லை. டெல்லியில் போராடும் தமிழக விவ சாயிகளை அவர் கண்டுகொள்ள வில்லை.

நெடுவாசல் பகுதியை பாலை வனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட் டத்தை ரத்து செய்ய வேண்டும். இனி யும் இழுத்தடிக்காமல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாய பிரச்சினை, மீனவர் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். கச்சத்தீவு எங்களுக்கு வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. விவசாயிகளுக்காக நாங் கள் இறக்கவும் தயார். எங்கள் கோரிக்கையை மத்திய அரசு கேட்கா விட்டால், இன்று கத்திப்பாராவை பூட்டியதுபோல ஒருநாள் கோட்டை யையும் பூட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புழல் சிறையில் அடைப்பு

இதற்கிடையில், கைது செய்யப் பட்ட கவுதமன் உட்பட 6 பேர், ஆலந் தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு, 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப் பட்டனர்.

சாஸ்திரிபவன் முற்றுகை

விவசாயிகளுக்கு ஆதரவு தெரி வித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை சாஸ்திரிபவனை நேற்று காலை முற்றுகையிட்டனர். அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் முற்றுகை யிடத் திரண்டனர். கோயம்பேடு 100 அடி சாலையிலும் போராட்டம் நடந்தது.

பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், விமான நிலையம் செல்பவர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களும் வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in