செப்டம்பரில் மங்கள்யான் செவ்வாயைத் தொடும்: இஸ்ரோ தலைவர் தகவல்

செப்டம்பரில் மங்கள்யான் செவ்வாயைத் தொடும்: இஸ்ரோ தலைவர் தகவல்
Updated on
1 min read

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கிராமப்புற பகுதிகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கிராம வளர்ச்சி மையங்களின் திறப்பு விழா புதுவையில் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுவையில் தேங்காய்திட்டு, மதகடிப்பட்டு, கரியமாணிக்கம் மற்றும் மாஹே, ஏனாம் உள்ளிட்ட 5 கிராம வளர்ச்சி மையங்களை மத்திய இணையமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மங்கள்யான் விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் பயணிக்கிறது. அது செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தை சென்றடையும். அடுத்தகட்டமாக பிஎஸ்எல்வி-சி24 என்ற ராக்கெட்டுடன் ஐஆர்என்எஸ்எஸ்-1பி என்ற செயற்கைகோளை வரும் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்திற்குள் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.

மேலும், மிகவும் அதிக எடை கொண்ட ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி மார்க்-3ஐ மே இறுதி அல்லது ஜுன் முதல் வாரத்தில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.

விண்வெளிக்கு மனிதனை செலுத்தும் திட்டத்துக்கான முதல் சோதனை முயற்சியாக ஆளில்லா விமானத்தை வரும் ஜுன் முதல் வாரத்தில் அனுப்ப முடிவு செய்துள்ளோம். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in