மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பேருந்து தினம் கொண்டாடினால் புகார் அளிக்கலாம்: புதிய செல்போன் எண் அறிவிக்க திட்டம்

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பேருந்து தினம் கொண்டாடினால் புகார் அளிக்கலாம்: புதிய செல்போன் எண் அறிவிக்க திட்டம்
Updated on
1 min read

சென்னையில் பேருந்து தினம் கொண்டாடத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஈடுபடும் மாண வர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்க செல்போன் எண் விரைவில் அறிவிக்கப்பட வுள்ளது.

சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவர்களில் சிலர் குழுவாக சேர்ந்து ஆண்டுதோறும் பேருந்து தினம் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட் டத்தின்போது ஆட்டம் ஆடி, பாடல் பாடி சாலையில் பட் டாசு வெடித்து உற்சாகத்தை காட்டுகின்றனர்.

இதுபோன்ற கொண்டாட்டம் சில இடங்களில் வன்முறை யாக மாறி விடுகிறது. எனவே இதுபோன்ற கொண்டாடங் களுக்கு, சென்னை உயர்நீதி மன்றம் சில மாதங் களுக்கு முன்பு தடை விதித்தது. தடையை மீறும் மாணவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் இதனை மீறி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து பேருந்து தின கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணி களும் அவதிக்கு ஆளாவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், கல்லூரி மாண வர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூட்டு ஆலோசனை கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. இதில், போலீஸ் உயர் அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரி கள், கல்லூரி முதல்வர்களும் கலந்து கொண்டனர். கல்லூரி களில் மாணவர்களின் வருகை பதிவு கண்காணிப்பது, வளாகங் களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, கல்லூரி மாணவர் களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாதந்தோறும் கூட் டங்கள் நடத்துவது, கல்லூரி மாணவர்களிடையே கலை நிகழ்ச்சிகள் நடத்துவது போன் றவை குறித்து விவாதிக்கப் பட்டன.

இதுதொடர்பாக போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாடு வதால், பயணிகளுக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. சில நேரங்களில் மாணவர்களிடையே நடக்கும் மோதலால், வன்முறை நடக்கின்றன. பயணிகளின் பாது காப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படு கிறது. எனவே இந்த கூட்டு ஆலோசனை கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகளை முன்வைத் துள்ளோம்.

செல்போனில் புகார்

கல்லூரி மாணவர்களுடன் வலம் வரும் முன்னாள் மாண வர்களின் பட்டியலை தயா ரித்து போலீஸாரிடம் வழங்க வேண்டுமென கல்லூரி முதல் வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் நேரடியாக போலீ ஸாருக்கு புகார் அளிக்கும் வகையில் செல்போன் எண் அறிவிக்க வேண்டுமென பல் வேறு தரப்பினரும் வலியுறுத்தி யுள்ளோம். எனவே, இதற்கான அறிவிப்பை காவல்துறை வெளி யிடும் என எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in