தூத்துக்குடியில் இலங்கை மீனவர்கள் 24 பேர் கைது

தூத்துக்குடியில் இலங்கை மீனவர்கள் 24 பேர் கைது
Updated on
1 min read

இந்தியக் கடலோரக் காவல் படைக்கு சொந்தமான ‘ஐ.சி.ஜி.எஸ். வைபவ்’ என்ற கப்பலில், அதன் கேப்டன் சஞ்சீவ் டிரிகா தலைமையில், கடலோரக் காவல் படையினர் இந்திய கடல் பகுதியில் புதன்கிழமை காலை ரோந்து சுற்றி வந்தனர்.

அப்போது, கன்னியாகுமரியில் இருந்து 90 கடல் மைல் தொலைவில் இந்தியக் கடல் எல்லைக்குள் இலங்கையைச் சேர்ந்த 4 படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்ததை கடலோரக் காவல் படையினர் பார்த்தனர்.

இதையடுத்து அந்த படகுகளை சுற்றிவளைத்த கடற்படையினர் அதில் இருந்த 24 இலங்கை மீனவர்களை கைது செய்தனர். 4 படகுகள், அதில் இருந்த மீன்கள், வலைகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in