

தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் இறந்தனர்.
பட்டுக்கோட்டை அருகே யுள்ள மதுக்கூர் இடையாத்தி பால் பண்ணை சாலையில் வசிப்பவர் ரமேஷ். சுமை தூக்கும் தொழி லாளி. இவரது மகன் மணி கண்டன்(5). பக்கத்து வீட்டைச் சேர்ந்த, சமையல் தொழிலாளி மணிமாறன் மகன் ஸ்ரீதர்(4). சிறுவர்கள் இருவரும் நேற்று காலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, எதிரில் உள்ள தோட்டத்தின் கம்பி வேலியைத் தொட்டபோது, எதிர்பாராதவித மாக மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர்.போலீஸார் சிறுவர்களின் உடல்களை மீட்டு, பிரேதப் பரி சோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.