

வழக்கறிஞர் நடைமுறை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி ஆகஸ்ட் 5 வரை போராட்டம் தொடரும் என்று வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தஞ்சையில் தமிழ்நாடு- புதுச் சேரி வழக்கறிஞர்கள் சங்கக் கூட்ட மைப்பின் பொதுக்குழுக் கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.திருமலைராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது.அப்போது திருமலைராஜன் செய்தியாளர் களிடம் கூறியது:
43 வழக்கறிஞர்களை இடைநீக் கம் செய்துள்ளதும், 126 வழக்கறி ஞர்கள் மீது அகில இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ள தும் சட்ட விரோதம். அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற்று, இடைநீக்கம் செய்தவர்கள் பணிக்குத் திரும்பும்வரை, நீதி மன்றப் புறக்கணிப்புப் போராட்டம் தொடரும்.
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வம், அகில இந்திய பார் கவுன்சில் நிர்வாகி பிரபாகரன் ஆகியோர், மெய்வழி முருகமலை ஆண்டவர் கல்லூரியில் 1986-89-ம் ஆண்டுகளில் பி.எல். பட்டம் பெற்றதாக கூறுகின்றனர். அப்படி ஒரு கல்லூரி இருந்ததற்கான ஆதாரமே இல்லை. எனவே, அகில இந்திய பார் கவுன்சில், அவர்கள் இருவரின் சான்றிதழ்களைப் பரிசீலித்து, அவை போலி என்றால், இருவர் மீதும் கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிமம் ஒப்படைப்பு
வழக்கறிஞர்கள் மீதான இடை நீக்க உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்தப் பொதுக் குழுவில் 1,000 வழக்கறிஞர்கள், தங்கள் உரிமத்தை ஒப்படைத் துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 65 ஆயிரம் வழக்கறிஞர்களும் தங்கள் உரிமத்தை ஒப்படைக்கத் தயாராக உள்ளனர். இந்தப் போராட்டம் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். 6-ம் தேதி செயற்குழுவைக் கூட்டி, அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவெடுப்போம் என்றார்.