Published : 18 Jun 2015 07:48 AM
Last Updated : 18 Jun 2015 07:48 AM

மெட்ரோ ரயில் மேம்பால விபத்து உயிரிழப்புக்கு அதிகாரிகள் அலட்சியமே காரணம்: கம்பி அதிக எடையுடன் இருந்ததால் தலை நசுங்கியது

கிண்டி மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணியில்போது கம்பி விழுந்து பலியான கிரிதரன் ஹெல்மெட் அணிந்திருந்திருந்தும் தலை நசுங்கி இறந்துள்ளார்.

அதே விபத்தில் காயம் அடைந்த மன்சூர் இது குறித்து கூறியதாவது:

வழக்கமாக இந்த வழியா கத்தான் செல்வேன். பாலத்தின் மேலே நின்று தொழிலாளர்கள் வேலை செய்வதை பல நாட்கள் பார்த்திருக்கிறேன். இன்றும் எதேச்சையாக பார்த்தபோது மேலே இருந்து ஒரு கம்பி கீழே வந்து கொண்டிருந்தது. என்ன ஆகப் போகிறதோ என்று நினைப்பதற்குள் எனக்கு முன்னால் சென்றவர் மீது விழுந்து அவரை அப்படியே அமுக்கியது. இதில் அவரது மோட்டார் சைக்கிள் பின்னோக்கி வந்து எனது மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளியது. இதில் நானும் கீழே விழுந்து விட்டேன்.

மேலும் பல கம்பிகள் விழும் என்ற பயத்தில் கிரிதரன் உடல் அருகே யாருமே செல்லவில்லை. சில நிமிடங்களுக்கு பின்னர்தான் அருகே சென்று அவர் மேலே இருந்த கம்பியை அகற்றினோம். அவரது ஹெல்மெட்டை அகற்றியபோது அவரது காது வழியாக ரத்தம் வந்தது. அப்போதே அவர் இறந்துவிட்டார் என்றார்.

பலியான கிரிதரன் ஹெல்மெட் அணிந்துதான் மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார். ஆனால் கம்பியின் எடை அதிகமாக இருந்ததால் அவரது ஹெல் மெட்டுடன் சேர்த்து அவரது தலையை கம்பி நசுக்கிவிட்டது.

2-வது முறையாக சம்பவம்

துரைப்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் நேற்று முன்தினம் இதே சாலை வழியாக காரில் செல்லும்போது சாரம் கட்டும் கம்பி அவரது கார் மீது விழுந்துள்ளது. இதில் காரின் கண்ணாடி உடைந்து, முன்பக் கமும் சேதம் அடைந்தது. இதுகுறித்து அவர் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத் திருக்கிறார். அதன் பின்னராவது மெட்ரோ ரயில் பொறியாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் ஓர் உயிர் பலியை தடுத்திருக்கலாம்

விதிகளை பின்பற்றாத அதிகாரிகள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வேலை செய்யும் போது, பாதுகாப்பு வலைகள் கட்டிய பின்னரே வேலையை செய்ய வேண்டும். பணியின்போது ஏதாவது விழுந்தாலும் அது பொது மக்களை பாதிக்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்த பாதுகாப்பு வலைகள். ஆனால் மெட்ரோ ரயில் பணியில் இந்த பாதுகாப்பு வலைகள் கட்டப் படவில்லை. இதை கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத் திருந்தால் இந்த விபத்தை தடுத்திருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x