

மின்வாரியத்தில் பல்வேறு பணி யிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு களின் மாதிரி விடை சுருக்கத்தை வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சக்தி பொறி யாளர்கள் சங்கத்தின் மதுரை மண்டல பொதுச் செயலாளர் குருவேல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் காலியாக உள்ள 375 உதவி பொறியாளர்கள், 1475 தொழில் நுட்ப உதவியாளர், உதவி வரை வாளர், 700 இளநிலை உதவி யாளர்கள், தட்டச்சர் பணியிடங் களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தப் பணியிடங்களில் ஜாதி வாரியான இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதரவற்ற பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை. இப்பணிகளுக்கான எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வுகளில் விதிமுறைகள் பின் பற்றப்படவில்லை.
இப்பணியிடங்களை நிரப்பு வதற்கான தேர்வுகள் முடிந்து பல மாதங்களான நிலையில், உதவி பொறியாளர்களுக்கான தேர்வு முடிவு மட்டும் வெளி யிடப்பட்டுள்ளது. மற்ற பணியிடங் களுக்கான தேர்வு முடிவை வெளியிடாமல் வைத்துள்ளனர். எனவே, அனைத்து தேர்வு முடிவு களையும் தரவரிசை அடிப் படையில் வெளியிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல் வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து 2 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மின்வாரிய தேர்வுக்கான மாதிரி விடை சுருக்கத்தை வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தப் பணியிடங்களில் ஆதரவற்ற பெண்கள், முன்னாள் ராணுவத்தின ருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இப்பணிகளுக்கான எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு களில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.