

கோயம்பேடு பேருந்து நிலையத்திற் குள் செல்போன் திருடும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகமாக நடந்தன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் செல்போன்களை பறிகொடுத்த 30-க்கும் மேற்பட்டவர்கள் கோயம் பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள் ளனர். இதில் தனிகவனம் செலுத்திய போலீஸார் பேருந்து நிலையத்துக்குள் சந்தேகத் திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த 2 பேரை பிடித்து விசாரிக்க, அவர்கள் செல்போன்களை திருடி செல்வது தெரிந்தது.
விசாரணையில் அவர்கள் பெயர் ராஜ்குமார் (19), ஹவ்குமார்(19) என்பதும், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. அவர்கள் கூறிய தகவல்களை கேட்டு போலீஸாரே அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
திருட்டு தொழில் செய்வதற் காகவே ஜார்கண்டில் இருந்து ஒரு கும்பல் வந்திருப்பதாகவும், அவர்கள் சென்னையில் பல இடங்களில் லாட்ஜ்களில் தங்கி யிருப்பதாகவும் கூறினர். பேருந்து நிலையத்திற்கு வந்த நாங்கள், பர்ஸ் போன்றவற்றை திருட முடியா ததால், அனைவரும் கையில் வைத்திருக்கும் செல்போன் களை பறித்து சென்றோம். இப்படி திருடும் போன்களை எங்கள் மாநிலத் திற்கு கொண்டு சென்று ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்று விடுவோம். எங்களை போல பல இளைஞர்கள் இந்த திருட்டு கும்பலில் இருப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
திருட்டு கும்பலை சேர்ந்த மற்ற வர்களையும் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.