Published : 08 Apr 2017 09:08 am

Updated : 16 Jun 2017 14:20 pm

 

Published : 08 Apr 2017 09:08 AM
Last Updated : 16 Jun 2017 02:20 PM

பணப் பட்டுவாடாவை தடுக்க மேலும் 5 கம்பெனி துணை ராணுவம் வருகை: மாநகர காவல் ஆணையர் கரன் சின்ஹா தகவல்

5

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க மேலும் 5 கம்பெனி துணை ராணுவப் படையினரை வரவழைக்க திட்டமிட்டிருப்பதாக மாநகர காவல் ஆணையர் கரன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் 12-ம் தேதி நடைபெற உள்ள வாக்குப் பதிவின்போது, பாது காப்புப் பணியில் சென்னை மாநகர போலீஸார் 1,694 பேர் ஈடுபடுத்தப் பட உள்ளனர். அவர்களுக்கு வாக்குச் சாவடிகளை கணினி வழியாக ஒதுக்கும் பணி ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இப்பணி தேர்தல் சிறப்பு பொது பார்வையாளர் மனோஜ் அகர்வால், பொதுப் பார்வையாளர் பி.ஜவகர், காவல் பார்வையாளர் ஷிவ்குமார் வர்மா, சென்னை மாநகர காவல் ஆணையர் கரன் சின்ஹா, மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்தி கேயன், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது, சம்பந்தப்பட்ட போலீஸார் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் வசிப்பவரா, அந்த தொகுதிக்குள் பணியாற்றுபவரா என கணினி மூலமாக பரிசோதிக்கப்பட்டது. இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு, வாக்குச் சாவடிகள் ஒதுக்கப்பட்டன. பின்னர் அது தொடர்பான அறிக்கை, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் கரன் சின்ஹா நிருபர்களிடம் கூறும்போது, “நேற்று இரவு 3 இடங்களில் நடை பெற்ற சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது வரை தோராயமாக ரூ.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் பல்வேறு கட்சி யினரிடமிருந்து பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. பணப் பட்டு வாடாவைத் தடுக்க, பாதுகாப்பை மேலும் பலப்படுத்த உள்ளோம். அதற்காக மேலும் 5 கம்பெனி துணை ராணுவப் படையினரை வரவழைக்க திட்டமிட்டிருக்கி றோம். அதன் மூலம் பணப் பட்டு வாடா முற்றிலும் தடுக்கப்படும்.

மேலும் இரு கட்சியினரிடையே நடைபெறும் மோதல்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இனி மோதல் கள் நடைபெறாமல் பார்த்துக்கொள் ளப்படும் என்றார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பணப் பட்டுவாடாகம்பெனி துணை ராணுவம் வருகைமாநகர காவல் ஆணையர்கரன் சின்ஹாதகவல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author